தேர்வுகளில் குளறுபடி நடப்பதைக் கண்டித்து இளைஞர்கள் 4வது நாளாக போராட்டம்! - உத்தரபிரதேசத்தில் பரபரப்பு
உத்தரபிரதேசத்தில் தேர்வுகளில் குளறுபடி நடப்பதைக் கண்டித்து இளைஞர்களை 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் பகுதியில் பி.சி.எஸ் மற்றும் ஆய்வு அதிகாரி தேர்வுகளை ஒரே நாளில் நடத்த வலியுறுத்தியும், தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கக்கோரியும் இளைஞர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : FactCheck | துப்பாக்கியுடன் தேவேந்திர ஃபட்னாவிஸின் போஸ்டர் - பாபா சித்திக் கொலையுடன் தொடர்புபடுத்தும் பதிவுகள் : உண்மை என்ன ?
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்து போராட்டக்காரர்கள் பலர் உள்ளே நுழைய முயற்சித்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். முன்னதாக, நேற்று போராட்டத்தின் போது பொருட்களை சேதப்படுத்திய 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.