#ViralNews | இதெல்லாமா சாப்பிடுவாங்க… உத்தரபிரதேசத்தில் பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கிலோ முடி!
உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது தலை முடியை உண்ணும் பழக்கத்திற்கு ஆளாகிய நிலையில், அப்பெண்ணின் வயிற்றில் இருந்து 2 கிலோ எடைக்கொண்ட தலை முடி அகற்றப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசத்தை சேர்ந்த 21 வயது பெண், சமீபத்தில் சரியாகச் சாப்பிடவில்லை என்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள், விநோதமான பழக்கத்தால் பெண் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைத் கண்டறிந்தனர். அதாவது அந்தச் பெண், `Pica' என்று அழைக்கப்படும் உண்ணுதல் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இத்தகைய பாதிக்கப்புள்ளவர்கள் காகிதம், மணல், புல் போன்ற உணவல்லாத, அழுக்கானவற்றை உண்பதுண்டு. இத்தகைய பழக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண், தனது முடியை அதிகப்படியாக உண்டிருக்கிறார். குறிப்பாக இந்த பெண் கடந்த 16 ஆண்டுகளாக முடியை சாப்பிட்டு வருவதாக மருத்துவர்கள் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் உணவுகளை எடுத்துக்கொள்ள முடியாமல் அவதிப்பட்டுள்ளார். பெண் சரியாகச் சாப்பிடாத காரணத்தை கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : #America | தரையிறங்கிய போது விமானத்தில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு! – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
மருத்துவ பரிசோதனையில் இதைக் கண்டறிந்து, இரண்டு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின், பெண்ணின் வயிறு மற்றும் குடலில் இருந்த முடிகளை மருத்துவர்கள் அகற்றினர். பின் அதை அளந்து பார்த்தபோது, சுமார் இரண்டு கிலோ முடியை பெண் உண்டிருப்பது தெரிய வந்தது. இந்த நிகழ்வு கேட்பதற்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுவதாக இருந்தாலும், இதனால், அப்பெண் இறந்திருக்கலாம் என்று மருத்துவர் எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.