For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உதகை மலை ரயில் மேலும் 2 நாட்களுக்கு ரத்து!

11:25 AM Dec 09, 2023 IST | Web Editor
உதகை மலை ரயில் மேலும் 2 நாட்களுக்கு ரத்து
Advertisement

உதகை மலை ரயில் சேவை மேலும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகளால் கடந்த நவ. 22-ம் தேதி முதல் உதகை-குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது.  சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர்,  நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:  விடுமுறை அளித்தும் பள்ளிக்கு வரச் சொன்ன நிர்வாகம் – அரசு உத்தரவை மீறிய கோடம்பாக்கம் MGR பள்ளியின் சுற்றறிக்கை இணையத்தில் வைரல்.!

இந்த நிலையில் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  பாதுகாப்பு கருதி மேலும் 2 நாட்களுக்கு அதாவது இன்றும், நாளையும் (டிச. 9, 10) உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement