For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு: 22 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

10:26 AM Oct 26, 2023 IST | Web Editor
அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு  22 பேர் பலி  50க்கும் மேற்பட்டோர் படுகாயம்
Advertisement

அமெரிக்காவின் லூயிஸ்டன் நகரில் நடந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Advertisement

அமெரிக்காவில் மைனே மாநிலத்தின் லூயிஸ்டன் நகரில் 3 இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தன.  இந்த தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 50-60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும்  கூறப்படுகிறது.  இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அக்டோபர் 25ஆம் தேதி இரவு நடந்தது.

சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.  துப்பாக்கிச் சூடு சம்பவம்  உள்ளூர் பார் மற்றும் வால்மார்ட் மையத்தில் நடந்தது. விசாரணை அதிகாரிகள் சம்பவ இடங்களை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர் என்றார்.

இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை  லூயிஸ்டன் காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். சந்தேகத்திற்குரிய அந்த நபர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அவர் அரை தானியங்கி துப்பாக்கியை கையில் பிடித்துள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட தாக்குதல் நடத்தியவர் ராபர்ட் கார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சுமார் 20 வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றியவர்.

லூயிஸ்டன் மாநில காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டதோடு  தயவு செய்து கதவுகளை மூடிக்கொண்டு உங்கள் வீட்டிற்குள்ளேயே இருங்கள் என்று பேஸ்புக்கில் ஒரு பதிவின் மூலம் மக்களுக்குத் தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான செயல்பாடு அல்லது நபரை நீங்கள் கண்டால், 911ஐ அழைப்பதன் மூலம் எங்களுக்குத் தெரிவிக்காலம் எனவும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.facebook.com/permalink.php?story_fbid=734123235414313&id=100064499301811&ref=embed_post

லூயிஸ்டன் தாக்குதல் மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு மே மாதம், டெக்சாஸின் உவால்டேவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டது. இதில் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 19 குழந்தைகள் கொல்லப்பட்டனர். ஒரு அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு தொடர்பான 647 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement