For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பு : ட்ரம்பை பின்னுக்கு தள்ளிய கமலா ஹாரிஸ்!

10:50 AM Jul 25, 2024 IST | Web Editor
அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பு   ட்ரம்பை பின்னுக்கு தள்ளிய கமலா ஹாரிஸ்
Advertisement

அமெரிக்க அதிபா் தோ்தல் தொடா்பான கருத்துக் கணிப்பில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸ் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பைவிட முன்னிலை பெற்றுள்ளார்.

Advertisement

நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19ம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.

ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகிய நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.  இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னாள் அதிபர் டிரம்பைவிட முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான இப்ஸோ சுடன் இணைந்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இணைந்து இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது.

இந்த கருத்து கணிப்பு தொடர்பாக ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கும், ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கும் இடையே யாருக்கு ஆதரவு அதிகம் உள்ளது என்பதை அறிவதற்கான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.  அதிபா் தோ்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அதிபா் ஜோ பைடன் அறிவித்ததற்கு மறுநாளான ஜுலை 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இந்தக் கருத்துக் கணிப்பில், கமலா ஹாரிஸுக்கு 44 சதவீதம் பேரும் டொனால்ட் டிரம்ப்புக்கு 42 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனா்.  இதில் கமலா ஹாரிஸ் கூடுதலாக 2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளாா்.  இதற்கு முன்னதாக  ஜூலை 1 மற்றும் 2ம் தேதிகளில் நடத்தப்பட்ட இதே போன்ற கருத்துக் கணிப்பில் டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றிருந்தாா்.

அவருக்கு 44 சதவீதம் பேரும் கமலா ஹாரிஸுக்கு 42 பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனா். பின்னா் ஜூலை 15, 16ம் தேதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகிய இருவருமே 44 சதவீத வாக்குகளைப் பெற்று சமமாக இருந்தனா்.  ஆனால், அதிபர் தோ்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், கருத்துக் கணிப்பில் டிரம்ப்பை பின்னுக்குத் தள்ளி விட்டு கமலா ஹாரிஸ் கூடுதலாக 2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement