For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமெரிக்க அதிபர் தேர்தல் | ஜோ பைடனை விட கமலா ஹாரிஸுக்கு ஆதரவு!

11:36 AM Jul 20, 2024 IST | Web Editor
அமெரிக்க அதிபர் தேர்தல்   ஜோ பைடனை விட கமலா ஹாரிஸுக்கு ஆதரவு
Advertisement

அதிபா் தோ்தலில் போட்டியிடுவதற்கு தற்போதைய அதிபா் ஜோ பைடனை விட, துணை அதிபா் கமலா ஹாரிஸ் தான் தகுதியானவா் என்று அவரது ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த பெரும்பாலானோர் கருதுவதாக கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மீண்டும் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியிருக்கும் சூழலில், அவரை எதிர்த்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்த நிலையில், அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்துப் போட்டியிடுவதற்கு தற்போதைய அதிபா் ஜோ பைடனைவிட,  இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸ்தான் தகுதியானவா் என அவரது ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த பெரும்பாலானோர் கருதுவதாக ‘ஏபி-என்ஓஆா்’ நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

மக்கள் கருத்தாய்வு நிறுவனமான ‘ஏபி-என்ஓஆா்’ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில் படி, ஜோ பைடனை விட கமலா ஹாரிஸ்தான் அதிபா் பதவிக்குப் பொருத்தமானவா் என்று ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினா்களில் 6 போ் கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வயது மூப்பு காரணத்தாலும்,  முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு எதிரான நேரடி விவாத்தின் போது தடுமாறியதாலும் அதிபா் தோ்தல் போட்டியிலிருந்து பைடன் விலக வேண்டும் என ஜனநாயகக் கட்சிக்குள் குரல்கள் வலுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement