அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று! -வெள்ளை மாளிகை அறிவிப்பு...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மீண்டும் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியிருக்கும் சூழலில், அவரை எதிர்த்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இருவரும் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முன்னாள் அதிபர் டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜோ பைடன் டெலாவேருக்குத் திரும்புவார், அங்கு அவர் சுயமாக தனிமைப்படுத்தப்படுவார். அந்த நேரத்தில் தனது அனைத்து கடமைகளையும் முழுமையாகச் செய்வார்" என்று தெரிவித்துள்ளது
ஜோ பைடன், லாஸ் வேகாசில் நடந்த என்.ஏ.ஏ.சி.பி. தேசிய மாநாட்டில் கலந்து கொண்டநிலையில், நேற்று அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. முன்னதாக அந்த மாநாட்டில் பேசிய அவர் டொனால்டு டிரம்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். மேலும் நாட்டில் துப்பாக்கி வன்முறை அதிகரிப்பதை கடுமையாக கண்டித்தார்.
President Biden is vaccinated, boosted, and he is experiencing mild symptoms following a positive COVID-19 test.
He will be returning to Delaware where he will self-isolate and will continue to carry out all of his duties fully during that time.
A note from @POTUS' Doctor:…
— The White House (@WhiteHouse) July 17, 2024