யாரு சாமி நீ.. ஒரே நாளில் 15 உலக சாதனைகளை முறியடித்த நபர்!
அமெரிக்காவில் டேவிட் ரஷ் என்பவர் ஒரே நாளில் 15 உலக சாதனைகளை முறியடித்துள்ளார்.
அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தை சேர்ந்தவர் டேவிட் ரஷ். இவர் தனது வாழ்நாளில் 250 உலக சாதனைகளுக்கு மேல் முறியடித்துள்ளார். சமீபத்தில் திடீரென லண்டனில் உள்ள கின்னஸ் உலக சாதனைகளின் தலைமையகத்திற்குச் சென்று, ஒரே நாளில் 15 உலக சாதனைகளை முறியடித்து விட்டு சென்றார்.
அதாவது முதலில் ஜக்கிலிங் வித்தை எனப்படும் 3 பழங்களை ஒன்றன் பின் ஒன்றாக உயரே தூக்கிபோட்டு ஒரு நிமிடத்துக்குள் அதிக முறை ஆப்பிள்களை கடித்த சாதனையை டேவிட் ரஷ் முறியடித்து, 198 முறை ஆப்பிள்களை கடித்து உலக சாதனையை படைத்து விட்டு சென்று இருக்கிறார்.
இதையும் படியுங்கள் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி சிறப்பு பூஜை! – இன்று மாலை நடைதிறப்பு!
2-வது சாதனையாக டேபிள் டென்னிஸ் பந்துகளை 2 பாட்டில் மூடிகளில் 10 முறை மாற்று கைகளை பயன்படுத்தி வேகமாக துள்ளச்செய்தார். மிகவும் நூதனமாக இந்த சாதனையை வெறும் 2.09 நிமிடங்களில் செய்து முடித்து அசத்தியுள்ளார். அதேபோல் 30 வினாடிகளில் கையின் பக்கங்களை பேஸ்பாலால் மாறி மாறி அடித்த சாதனையையும் அவர் முறியடித்தார். அவர் 125 முறை பந்தினை இவ்வாறு அடித்து அசத்தினார்.
இதேபோன்று வாயிலிருந்து சுவரில் பந்தை அடித்து பிடித்தல், அமர்ந்தபடி பலூன்களை உடைத்தல், 30 வினாடிகளில் அதிக டி-ஷர்ட்கள் அணிதல், 10 டாய்லெட் பேப்பர் ரோல்களை ஒரே கையால் வேகமாக அடுக்கி வைத்தல், அதிக அளவு தண்ணீரை 30 வினாடிகளில் கைகளால் தள்ளிவிடுதல், ஒரு லிட்டர் எலுமிச்சை சாற்றை ஸ்ட்ரா மூலம் மிக வேகமாக குடிப்பது உள்ளிட்ட 15 வகைகளில் குறைந்த நிமிடத்தில் கின்னஸ் சாதனையை ஒரே நாளில் இந்த சாதனை மனிதன் முறியடித்து காட்டியுள்ளார்.