For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமெரிக்கா-இந்தியா சுற்றுச்சூழல் கூட்டு செயல்பாடுகளை ஊக்குவிக்க முனைப்பு! #Chennai -ல் அமெரிக்க துணை அமைச்சர் ஜெனிஃபர் ஆர்.லிட்டில்ஜான்!

12:42 PM Aug 24, 2024 IST | Web Editor
அமெரிக்கா இந்தியா சுற்றுச்சூழல் கூட்டு செயல்பாடுகளை ஊக்குவிக்க முனைப்பு   chennai  ல் அமெரிக்க துணை அமைச்சர் ஜெனிஃபர் ஆர் லிட்டில்ஜான்
Advertisement

அமெரிக்கா-இந்தியா சுற்றுச்சூழல் கூட்டு செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக சென்னை வந்த அமெரிக்க துணை அமைச்சர் ஜெனிஃபர் ஆர்.லிட்டில்ஜான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆக்கப்பூர்வ ஆலோசனைகளில் ஈடுபட்டார்.

Advertisement

பெருங்கடல்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான‌ அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் (பொறுப்பு) ஜெனிஃபர் ஆர்.லிட்டில்ஜான், அறிவியல், பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் பருவ‌நிலை செயல்பாடுகள், தூத‌ரின் நீர் நிபுணர்கள் திட்டத்தின் மூலம் நதி மறுசீரமைப்பு உள்ளிட்டவற்றில் அமெரிக்கா-இந்தியா கூட்டுச் செயல்பாடுகள் குறித்து உள்ளாட்சி தலைவர்கள், தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் சென்னையில் உரையடினார். ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இந்த உரையாடல் நடைபெற்றது.

இது குறித்து பேசிய அவர், "பல்லுயிர்தன்மையை பாதுகாப்பதில் இருந்து பருவ‌நிலை நெருக்கடியை எதிர்த்துப் போராடுவது வரை உலகின் மிகப்பெரிய சவால்களைத் எதிர்கொள்வதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா-இந்தியா ஒத்துழைப்பு முக்கியமானது. முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான அமெரிக்கா‍-இந்தியா முன்முயற்சியின் (iCET) கீழ் நமது இருதரப்பு உறவின் முக்கிய அங்கமாகவும் இது விளங்குகிறது. இந்த ஒத்துழைப்பின் வலிமையை சென்னை நிரூபிக்கிறது! சூரிய மற்றும் பசுமை தொழில்நுட்பங்களில் புதிய கண்டுபிடிப்புகள் முதல் சென்னையை அதன் நீர்வழிகளை பசுமையாக்கும் இலக்கில் ஆதரிக்கும் தூதரின் நீர் நிபுணர்கள் திட்டம் (AWEP) வரை, நாம் ஒன்றிணைந்து வளமை மற்றும் வலிமை மிக்க‌ எதிர்காலத்தை உருவாக்கலாம்," என்றார்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அமெரிக்க சூரிய எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனமான ஃபர்ஸ்ட் சோலாரின் உற்பத்தி ஆலையைப் பார்வையிட்ட துணை அமைச்சர் லிட்டில்ஜான், சூரிய ஆற்றல் தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை நடைமுறைகள் குறித்து மூத்த அலுவலர்களுடன் உரையாடினார்.

பின்னர் சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவுக்கு சென்ற அவர், பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி புத்தொழில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வசதிகளையும் பார்வையிட்டார். அமெரிக்க துணைத் தூதரகம் மற்றும் சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா இடையே திட்டமிடப்பட்டுள்ள பசுமைத் தொழில்நுட்பம் சார்ந்த புதிய சிந்தனைகள் மற்றும் சூழலியல்களை வளர்த்து ஊக்குவிப்பதற்கான கூட்டாண்மைக்கு முன்னதாக, சுற்றுச்சூழல் தீர்வுகளில் புதுமைகள் மற்றும் கூட்டு செயல்பாடுகளை வளர்ப்பதற்காக‌ பசுமைத் தொழில்நுட்ப தொழில்முனைவோர்களுடன் வட்டமேசை கூட்டத்தில் பங்கேற்றார்.

பின்னர் அண்ணா பல்கலைக்கழகம் சென்ற துணை அமைச்சர் லிட்டில்ஜான், உள்ளூர் மீள்தன்மை உத்திகளை வலுப்படுத்த பருவ‌நிலை மாதிரியைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவது தொடர்பான கருத்தரங்கில் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்களுடன் பங்கேற்றார்.

இதனை தொடர்ந்து சென்னை மேயர் ஆர்.பிரியாவை சந்தித்த துணை அமைச்சர் லிட்டில்ஜான் மற்றும் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹாட்ஜஸ், பருவ‌நிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் ஆறுகள், ஏரிகள் மற்றும் ஈரநிலங்கள் உள்ளிட்ட நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கியத்துவம் குறித்து விவாதித்தனர். நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நிலையான நீர் மேலாண்மை முக்கியப் பங்கு வகிப்பதை இந்த சந்திப்பு வலியுறுத்தியது. நதி மறுசீரமைப்புக்கான சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நகரங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள தூதரின் நீர் நிபுணர்கள் திட்டத்தின் வாயிலாக‌ சென்னையுடன் ஒத்துழைப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை துணை அமைச்சர் லிட்டில்ஜான் லிட்டில்ஜான் வலியுறுத்தினார்.

நிலைத்தன்மை நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளை ஆராய்வதற்காக நதி மறுசீரமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமூக பிரதிநிதிகளையும், அமெரிக்க வெளியுறவுத் துறை பரிமாற்ற‌ திட்டங்களின் முன்னாள் பயனாளிகளையும் துணை அமைச்சர் லிட்டில்ஜான் சென்னையில் சந்தித்தார்.

Tags :
Advertisement