For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை - #India கண்டனம்!

10:03 PM Oct 03, 2024 IST | Web Editor
மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை    india கண்டனம்
Advertisement

மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாக கூறப்பட்டிருந்தது. மேலும், வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்பி இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனுடன், இந்தியாவை மத சுதந்திரத்திற்கு எதிராக தொடர் அத்துமீறலில் ஈடுபடும் நாடாக வகைப்படுத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 2024-ல் இந்தியாவில் பல்வேறு தனிப்பட்ட நபர்கள் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறைகள், மத தலைவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் மற்றும் மத வழிபாட்டு தளங்கள் இடிக்கப்பட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி, அவை அனைத்தும் மத சுதந்திரத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் ஒரு அரசியல் சார்பு நிலை கொண்ட அமைப்பாகும். அவர்கள் தவறான தகவல்கள் மூலம் இந்தியாவைப் பற்றிய மோசமான சித்தரிப்பை உருவாக்க முயல்கிறார்கள். இந்த அறிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். அவர்கள் முதலில் அமெரிக்காவில் நடக்கும் மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்னைகளில் கவனம் செலுத்துவது நல்லது."

இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement