உர்வில் பட்டேல், பிரெவிஸ் அதிரடி... கம்பேக் கொடுத்த சென்னை - நெருக்கடியில் கொல்கத்தா!
நடப்பு ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 179 ரன்கள் அடித்தனர். இதன்மூலம் சென்னை அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனையடுத்து 181 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை பவர்பிளேயின் முடிவிலேயே 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனையடுத்து பிரெவிஸ், சிவம் துபே மிடில் ஆர்டர்களை கொண்டு செல்ல, 52 ரன்களில் பிரெவிஸ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிவம் துபே 45 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நூர் அஹமதும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய கம்போஜ் 3 பந்துகளில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில், பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்தார். இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிப் பெற்றது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வைபவ் அரோரா 3 விக்கெட்டுகளும், ஹர்சித் ராணா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.