வெளியானது UPSC தேர்வு முடிவு...
2023 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகள் மற்றும் குரூப் ’ஏ’ மற்றும் குரூப் ’பி’ பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றன. இதில் மூன்று கட்டங்களிலும் தேர்ச்சி பெற்று, தேர்வு செய்யப்படுவோருக்கு அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், பணிகள் ஒதுக்கப்படும்.
மூன்று நிலைகளில் நடத்தப்படும் 2023 யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் மே 28ஆம் தேதி அன்று நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மெயின் தேர்வு செப்டம்பர் 15, 2023 அன்று முதல் ஐந்து நாட்களுக்கு நடத்தப்பட்டது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2024 ஜனவரி 4 முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் யுபிஎஸ்சி தேர்வு ஆணையம் சிஎஸ்சி தேர்வு முடிவுகளை தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில், 1143 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை பார்க்கும் வழிமுறைகள்;
- upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பக்கத்திற்கு செல்லவும்.
- அதில் சிவில் சர்வீஸ் தேர்வு 2023 இறுதி முடிவுகள் என்ற இணைப்பை கிளிக் செய்து அதில் தோன்றும் pdf-ல் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கும்.
- அதில் இறுதி முடிவுகள் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
- வேண்டுமானால் பிடிஎஃப்ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.