Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இனி ரயில் நிலையங்களிலும் மது விற்பனை - உ.பி.அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

01:51 PM Dec 22, 2023 IST | Web Editor
Advertisement

உத்தரப்பிரதேசத்தில் இனி ரயில் நிலையங்களிலும் மதுபானங்கள் விற்கலாம் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

Advertisement

டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்ததால் எழுந்த புகாரில் ஆம் ஆம் கட்சியின் இரண்டு மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோர் சிறைக்கு செல்ல நேரிட்டது.  பின்னர் டெல்லி அரசு இந்த கொள்கையை ரத்து செய்தது.  இதற்கிடையில்,  தற்போது உத்தரப்பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு புதிய மதுக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், புதிய கலால் கொள்கை 2024-25க்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய கொள்கையின் படி,  உத்தரப்பிரதேசத்தில் ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இனி மதுபானங்களை விற்பனை செய்யலாம். இந்த இடங்களில் மதுபான சில்லறை கடைகள் திறக்கப்படும்.  இந்த இடங்களில் உள்ள கடைகள் கட்டிடங்களுக்குள்ளேயே இருக்கும்.  டிஜிட்டல் பேமெண்ட் மூலமாகவும் மக்கள் பரிவர்த்தனை செய்ய முடியும்.  இருப்பினும், இந்த மதுபான விற்பனை பிரீமியம் பிராண்டில் இருக்கும்.

புதிய கொள்கையில்,  அடுத்த 2024-25 நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் வெளிநாட்டு மது, பீர்,  கடைகளுக்கான உரிமக் கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.  அதாவது ஏப்ரல் 1ம் தேதி முதல் உ.பி.யில் மதுபானம் விலை உயரவுள்ளது.

போலீசார் மதுக்கடைகளுக்குள் செல்ல முடியாது:

புதிய கொள்கையில் இனி போலீசார் அனுமதியின்றி கடைக்குள் நுழையக்கூடாது என்ற விதிமுறையும் உள்ளது.  கலால் துறையின் அனுமதியின்றி காவல்துறை இனி எந்த மதுபான கடையை மூடவோ அல்லது சீல் வைக்கவோ முடியாது,  மேலும் அனுமதியின்றி கடையை ஆய்வு செய்யவோ முடியாது.

அகிலேஷ் யாதவ் கண்டனம்: 

சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) தலைவர் அகிலேஷ் யாதவ்,  ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மதுபானம் விற்கும் திட்டத்தை விமர்சித்து,  உ.பி.யை 1 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற இதுதானா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,  இதனால் மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்.

பொது இடங்களில் மது அருந்துவது மிகவும் நல்லது என்று பாஜகவினர் நினைத்தால்,  அதை தங்கள் அலுவலகங்களில் இருந்து விற்கவும்,  பொது இடங்களை அராஜகம் மற்றும் குற்றச் செயல்களின் மையங்களாக மாற்ற வேண்டாம் என்றும் அகிலேஷ் யாதவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement
Next Article