இண்டிகோ உப்புமாவில் இவ்வளவு உப்பா? பிரபல ஆய்வாளரின் வீடியோ வைரல்!
இண்டிகோவில் வழங்கப்படும் உணவுப் பொருட்களில் உள்ள உப்பின் அளவை மேகியுடன் ஒப்பிடும் வீடியோவை ரேவந்த் ஹிமத்சிங்க என்ற உணவுப் பொருட்கள் ஆய்வாளர் வீடியோ பகிர்ந்துள்ளார்.
உணவுப் பொருட்கள் ஆய்வாளர் என்று பிரபலமாக அறியப்படும் ரேவந்த் ஹிமத்சிங்க என்பவர் பல்வேறு இடங்களுக்கு சென்று வித்தியாசமான உணவுகளை ருசித்து அந்த உணவுப் பொருட்களை மதிப்பாய்வு செய்வதில் சிறப்பு பெயர் பெற்றவர். அந்த வகையில், அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் Cadbury's Bournvita இல் உள்ள சர்க்கரை உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்தார். மதிப்பாய்வு செய்த பிறகு அந்த நிறுவனத்திடம் Cadbury's Bournvitaவில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்படி கேட்டுக்கொண்டார். அந்த மதிப்பாய்வு பற்றி இணையத்தில் பதிவிட்டார். அதன் பின்னர் அனைவராலும் பகிரப்பட்டு இணையத்தில் வைரலானார்.
இதை படியுங்கள் : கள்ளழகர் திருவிழா: மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை!
இதனைத் தொடர்ந்து, அவர் தப்போது இண்டிகோ விமானத்தில் வழங்கப்படும் உணவை மதிப்பாய்வு செய்துள்ளார். உப்புமா, அவல் போகா உள்ளிட்ட உணவுகளை மதிப்பாய்வு செய்தார். இண்டிகோ விமானத்தில் வழங்கப்படும் உணவுகள் "ஆரோக்கியமாக இருக்கிறது" என்று ஹிமத்சிங்க கூறினார். இது தொடர்பாக, தனது "X" இல் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது :
“மேகி அதிக சோடியம் நிறைந்த உணவு என்பது நம்மில் பலருக்கு தெரியும். இண்டிகோவில் வழங்கப்படும் உப்புமாவில் மேகியை விட 50% உப்பு அதிகமாக உள்ளது. இண்டிகோவில் வழங்கப்படும் அவல் போகாவில் மேகியை விட 83% உப்பு அதிகமாக உள்ளது. அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்னைகள் மற்றும் சிறுநீரக பிரச்னைகள் ஏற்படலாம்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Shocking video about the food served at Indigo airlines!
Most of us already know that Maggi is a high sodium food! What most of don’t know is that Indigo’s Magic Upma has 50% more sodium than Maggi, Indigo’s Poha has ~83% more sodium than Maggi, and Daal Chawal has as much… pic.twitter.com/mUyH3VkXnw
— Revant Himatsingka “Food Pharmer” (@foodpharmer2) April 17, 2024