For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஜய்யின் ‘GOAT’ திரைப்படத்தின் அப்டேட் - ட்விஸ்ட் கொடுத்த வெங்கட் பிரபு!

06:17 PM Jan 14, 2024 IST | Web Editor
விஜய்யின் ‘goat’ திரைப்படத்தின் அப்டேட்   ட்விஸ்ட் கொடுத்த வெங்கட் பிரபு
Advertisement

இயக்குநர் வெங்கட் பிரபுவின் பதிவிலிருந்து, விஜய்-ன் Greatest Of All Time திரைப்படத்தின் அப்டேட் பொங்கல் அன்று வெளியாக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படமான Greatest Of All Time திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படம், அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ஸ்னேகா, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அர்விந்த் ஆகாஷ், அஜய்ராஜ் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர். படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 24-ம் தேதி நடைபெற்றது. இப்படத்திற்கான ஷூட்டிங்  பேங்காக்கில் நடைபெற்று வந்தது.

ஜனவரி முதல் வாரம் தொடங்கும் இந்தப் படப்பிடிப்பில் விஜய்யுடன் மற்ற நடிகர்களும் கலந்துகொள்ள உள்ளனர். Greatest Of All Time திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிச. 31-ம் தேதி வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. தொடர்ந்து செகண்ட் லுக் (இரண்டாம் பார்வை) போஸ்டரை படக்குழு வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், பொங்கலை முன்னிட்டு இப்படத்தின் அப்டேட் ஒன்றை வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் கொடுத்துள்ளார். தன் பதிவில், “இந்தப் பொங்கல் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸாக இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார். இதனை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது பக்கத்தில் பகிர்ந்து, ஆம் கண்டிப்பாக என தெரிவித்துள்ளார்.இதனால், படத்தின் விடியோ அல்லது போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags :
Advertisement