Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Thalapathy69’ குறித்த அப்டேட் இன்று வெளியாகிறது!

02:01 PM Sep 13, 2024 IST | Web Editor
Advertisement

விஜய்யின் கடைசி திரைப்படமான ‘தளபதி 69’ குறித்த அப்டேட்டை, தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரெடக்‌ஷன்ஸ் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

Advertisement

திரையுலகில் விஜய் அறிமுகமாகி இந்த வருடத்துடன் 32 ஆண்டுகள் நிறைவடைகிறது. திரை வாழ்க்கையை தொடர்ந்து அரசியலில் ஈடுபட்ட விஜய், இந்தாண்டு தொடக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார். கையெழுத்தான படங்கள் முடிந்ததும், முழு அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகைக்கு பின், திரைக்கு வந்துள்ள படம் ‘தி கோட்’. லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கினார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 5ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடி வருகிறது.

இந்நிலையில் தளபதி ‘69’ குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தளபதி ‘69’ படத்தை கே.வி.என் புரெடெக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் விஜய்யின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதல்முறையாக கால் பதிக்கின்றனர். இன்று மாலை 5 மணிக்கு தளபதி ‘69’ குறித்த அப்டேட் அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags :
KVN ProductionsThalapathy69vijay
Advertisement
Next Article