Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உ.பி. ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் 122 பேர் பலியான விவகாரம் - நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக யோகி ஆதித்யநாத் தகவல்!

07:24 PM Jul 03, 2024 IST | Web Editor
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில்  கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலியான சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்தனர். இது நாடுமுழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று சம்பவ இடத்தை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அவர், கூட்ட நெரிசலில் பலியானவர்களில் 6 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில் நான்கு பேர் ஹரியானாவையும், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த தலா ஒருவரும் இதில் பலியாகியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்த நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த குழுவில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இடம்பெறுவார்கள். இந்த சம்பவத்துக்கு யார் காரணம்? என்பது குறித்தும், இது திட்டமிட்ட சதியா என்பது குறித்தும் இந்தக் குழு விசாரிக்கும். எதிர்காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்யும் என்றும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்போது, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு ஏற்படுத்தும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

Tags :
Hathras Stampede IncidentJudicial Inquiryuttar pradeshyogi Adityanath
Advertisement
Next Article