உ.பி. கர்ஹால் இடைத்தேர்தலில் தலித் பெண் கொல்லப்பட்டதாக பரவும் வீடியோ - AajTak உண்மை சரிபார்ப்பு கூறுவது என்ன?
This news Fact Checked by 'AajTak'
உ.பி.மாநிலம் கர்ஹால் இடைத்தேர்தலில் தலித் பெண் கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இது தொடர்பான உண்மைச் சரிபார்ப்பை விரிவாக காணலாம்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்றது. அதே நாளில், மாநிலத்தில் உள்ள கர்ஹாலில் ஒரு பட்டியல் சமூக பெண்ணின் மர்மமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்காததால் கொலை நடந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அது தவறானது என சமாஜ்வாதி கட்சி மறுத்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரசாந்த் யாதவ் மற்றும் மோகன் கத்தேரியா ஆகியோருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது . இந்த வீடியோவில் சிலருக்கு இடையே சண்டை நடக்கிறது. அதில் ஒரு ஆண் ஒரு பெண்ணை செங்கல்லால் கொடூரமாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவின் தொடக்கத்தில் , ஒரு நபர் தரையில் படுத்திருந்த ஒருவரை செங்கலால் அடிப்பதைக் காணலாம். இதனைத் தொடர்ந்து ஒரு பெண் அடிவாங்கும் நபரை காப்பாற்ற வந்து, தாக்கியவரைத் தடியால் தாக்குகிறார். இதனைத் தொடர்ந்து பதிலுக்கு அந்த ஆண் பெண்ணை பலமுறை செங்கலால் அடிக்கும் காட்சிகள் வீடியோவில் காணலாம்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கர்ஹாலில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அன்று நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ இது எனவும் “யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வொரு நபருக்கும் உள்ள அரசியலமைப்பு உரிமை! ஆனால் கர்ஹாலில், சமாஜ்வாதி கட்சியின் வாக்களிக்குமாறு ஒரு தலித் பெண்ணை கொலை செய்துள்ளனர்” என அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவின் கீஃப்ரேம்களைத் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தியபோது நவம்பர் 19, 2024 தேதியிட்ட ட்வீட்டில் இதே வீடியோவை காண முடிந்தது. இந்த வீடியோவில் அந்த சம்பவம் நடைபெற்றது குஷிநகர் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடியோவுக்கு பதிலளித்த குஷிநகர் போலீஸ் அதிகாரி, இந்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலும் பல செய்திகளும் கூகுள் தேடுதலில் கிடைத்தன . நவம்பர் 18, 2024 தேதியிட்ட அறிக்கையின்படி , இந்த சம்பவம் குஷிநகரின் ஹனுமங்கஞ்ச் காவல் நிலையப் பகுதியின் பகவான்பூர் கிராமத்தில் நடந்துள்ளது. இருபிரிவினரிடையே ஏற்பட்ட சண்டையில் மக்கள் ஒருவரையொருவர் குச்சிகள், தடிகள் மற்றும் செங்கல்கள் மற்றும் கற்களால் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் சுமார் 6 பேர் காயம் அடைந்தனர் மற்றும் காயமடைந்த 3 பேர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஹனுமங்கஞ்ச் காவல் நிலையப் பொறுப்பாளர் ஓம் பிரகாஷ் திவாரியையும் தொடர்பு கொண்டோம். வைரலான வீடியோவில் உள்ள சம்பவம் நவம்பர் 18 ஆம் தேதி நடந்ததாக அவர் கூறினார். பாதிக்கப்பட்டவரின் வீடு இருந்த சாலை, மற்ற தரப்பினரின் தோட்டத்தை நோக்கி சென்றது. இந்த நிலம் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ராப்ரி தேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தேவேந்திர சவுத்ரி மற்றும் விஜய் சவுத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்ட இருவரும் பட்டியல் வகுப்பை (SC) சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
குஷிநகரில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ இடைத் தேர்தல் நடைபெற்ற கர்ஹால் பகுதியில் நடந்ததாக தவறாக சமூக வலைதளங்களில் பரவிவருவது உ.பி., குஷிநகரில் நிலத் தகராறில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ இது. இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை குறிப்பிடத்தக்கது.
Note : This story was originally published by 'AajTak' and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.