ரூ.3.9 லட்சம் மின்கட்டணம் - அதிர்ச்சி அடைந்த குடும்பம்... எங்கே தெரியுமா?
கான்பூரில் ரூ.3.9 லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என வந்த பில்லால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
பொதுவாக குளிர்சாதன பெட்டிகள், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மின்சாரம் அதிகளவில் செலவாகிறது. இதனால், மின்கட்டணம் அதிகரிக்கிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ஒரு குடும்பத்திற்கு ரூ.3.9 லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என பில் வந்துள்ளது.
இதையும் படியுங்கள் : 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கு! மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
இது குறித்து அந்த நபர் மின்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அப்போது, மின்சாதனங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதாக மின்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். 3.9 லட்சம் ரூபாய் பில் வந்ததை கண்டு அந்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தார்.
இதற்கு முன்னதாக, இதுபோல் குருகிராம் பகுதியில் ஒரு நபர் ரூ.45,000 மின்கட்டணம் செலுத்தியுள்ளார். இந்த நபர் அதிக மின் கட்டணம் செலுத்தியது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். தான் செலுத்திய இரண்டு மாத மின்கட்டணத்தின் ஸ்கிரீனஷாட்டை அந்த பதிவில் பகிர்ந்தது குறிப்பிட்டத்தக்கது.