Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உ.பி. இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலகும் காங்கிரஸ்? #Samajwadi நிலைபாடு என்ன?

11:57 AM Oct 23, 2024 IST | Web Editor
Advertisement

உத்தரப்பிரதேச இடைத்தேர்தல் போட்டியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

உத்தரப் பிரதேசத்தில் காலியாகவுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு வருகின்ற நவ.13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முடிவுகள் நவ.23ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. மில்கிபூர் சட்டப்பேரவை தேர்தலுக்கு தொடர்புடைய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த இடைத்தேர்தல் போட்டியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்சியாக காங்கிரஸுக்கு இரண்டு இடங்களுக்கு மேல் கொடுக்க அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தயாராக இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. காசியாபாத் சதர் மற்றும் கைர் சட்டமன்ற தொகுதிகளை மட்டும் காங்கிரசுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது.

மேலும், சமாஜ்வாதி போட்டியிடும் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

ஐந்து இடங்களை கோரும் காங்கிரஸ்

2 தொகுதிகளை மட்டுமே சமாஜ்வாதி தர முன்வந்துள்ள நிலையில் காசியாபாத், கைர் உட்பட புல்பூர், மஞ்சாவா, மீராபூர் ஆகிய இடங்களையும் காங்கிரஸ் கோருகிறது. ஆனால் கர்ஹல், புல்பூர், கடேஹரி, சிசாமாவு, மஜவான், மீராபூர், குந்தர்கி ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சமாஜ்வாதி முன்னரே அறிவித்து விட்டது.

இந்த நிலையில், இரண்டு தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதற்கு பதிலாக, இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ள நிலையில், இதுவரை காங்கிரஸில் இருந்து வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை.

இதனிடையே கூட்டணியில் காங்கிரஸை போட்டியிட வைக்கும் முயற்சியில் சமாஜ்வாதி ஈடுபட்டு வருவதாகவும், ஏற்கெனவே வழங்கிய இரு தொகுதிகளுடன் மில்கிபூர் இடைத்தேர்தலையும் காங்கிரஸுக்கு வழங்க அகிலேஷ் யாதவ் முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று அல்லது நாளைக்கு உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் போட்டியிடுமா? இல்லையா? என்பது உறுதியாகிவிடும்.

Tags :
CongressGhaziabadKhairSamajwadi
Advertisement
Next Article