Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இதுவரை சொந்த வீட்டில்தான் இருந்தேன்… ஆனால் இப்போ…” - நடிகர் ரவிமோகன் உருக்கம்!

சின்ன வயதில் இருந்து சொந்த வீட்டில் வசித்ததாகவும், தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் நடிகர் ரவிமோகன் உருக்கமாக பேசியுள்ளார்.
06:23 PM Jun 26, 2025 IST | Web Editor
சின்ன வயதில் இருந்து சொந்த வீட்டில் வசித்ததாகவும், தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் நடிகர் ரவிமோகன் உருக்கமாக பேசியுள்ளார்.
Advertisement

எட்டு தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீகணேசனின் அடுத்த படம் 3bhk. இதில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரபல கர்நாடக சங்கீத பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மகன் அம்ரித் ராம்நாத் இசையமைக்க, சிவகார்த்தியேன் நடித்த மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்கிறது. சென்னையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ராம், மாரிசெல்வராஜ், அஸ்வத் மாரிமுத்து, நித்திலன் சாமிநாதன், பார்க்கிங் ராம்குமார், மடோன் அஸ்வின், டாடா கணேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகர் ரவிமோகன் கலந்து கொண்டார்.

Advertisement

நடிகர் ரவிமோகன் மேடையில் பேசியதாவது,

‘‘இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். பொதுவாக ஒரு ஹீரோ படத்தை மற்ற ஹீரோவுக்கு காண்பிக்க மாட்டார்கள். நானும் சித்தார்த்தும் நண்பர்கள்.. அவர் தெலுங்கில் நடித்த பொம்மரிலுவின் தமிழ் ரீமேக்கில் நான் நடித்தேன். தற்போதும் நாங்கள் நண்பர்கள்தான். அவர் தவறான படங்களில் நடித்தது இல்லை. நான் கோமாளி படத்தில் ஸ்கூல் ரோலில் நடித்திருந்தேன். இதில் சித்தார்த் பள்ளி மாணவராக நடித்துள்ளார். அப்படி நடிப்பது கஷ்டம். நான் குட் நைட் படம் பார்த்தேன். அதில் மீது சிறப்பாக நடித்திருந்தார்.

இந்த படத்திலும் அவர் இருக்கிறார். இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் சிறப்பான இசை கொடுத்து இருக்கிறார். சரத்குமார், தேவயானி இதில் சிறப்பாக நடித்துள்ளனர். நானும் தேவயானியும் 'ஜீனி' படத்தில் நடித்து இருக்கிறோம். இந்த படம் சொந்த வீடு கனவு பற்றி பேசுகிறது. நான் வாடகை வீட்டில் இருந்தது இல்லை. சின்ன வயதில் இருந்தே சொந்த வீடுதான். ஆனால் தற்போது வாடகை வீட்டில் வசிக்கிறேன் ’’என உருக்கமாக பேசினார்.

Tags :
3BHKActor Ravi MohanChennaiMeethamovieRavi MohanSiddharthtamil cinema
Advertisement
Next Article