Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உன்னி முகுந்தனின் ”மார்கோ” திரைப்படம் தமிழில் வெளியாகிறது!

04:50 PM Dec 30, 2024 IST | Web Editor
Advertisement

உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான மார்க்கோ திரைப்படம் , ஜனவரி 3-ம் தேதி தமிழில் வெளியிடவுள்ளனர்.

Advertisement

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் உன்னி முகுந்தன். இவர் சமீபத்தில் தமிழில் வெளியான கருடன் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இதன் மூலம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றார் . இந்நிலையில் தற்பொழுது ஹனீஃப் அதேனி இயக்கத்தில் மார்கோ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 20-ம் தேதி மலையால மொழியில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இது மிகவும் ஆக்ஷன், வயலன்ஸ், துப்பாக்கி, ரவுடிசம் நிறைந்த கதைக்களமாக அமைந்துள்ளது. இதுவரை இப்படி வன்முறை நிறைந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகவில்லை என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இத்திரைப்படம் இதுவரை உலகளவில் 32.6 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உன்னி முகுந்தனுடன், யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ், என பலர் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்திற்க்கு ரவி பஸ்ருர் பின்னணி இசை அமைத்துள்ளார்.இப்படம் மக்களிடயே நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து தமிழிலும் வரும் ஜனவரி 3 ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags :
Haneef AdenimarcoNews7Tamilnews7TamilUpdatessudev nairUnni Mukundan
Advertisement
Next Article