கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் - சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடிய நிலையில் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. அப்போது சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க சட்டசபையில் சிறப்பு கவனம் ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக கட்சியை சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், "எல்லா திறமையும் பெற்ற ஒரு தலைவராக ஆளுமையாக வாழ்ந்தார். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கருணாநிதி" என்று தெரிவித்துள்ளார்.
சதன் திருமலைக்குமார் பேசுகையில், "சமூக நீதியை நிலைநாட்டியவர், நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர். எண்ணற்ற தலைவர்களுக்கும், முன்னாள் முதலமைச்சர்களுக்கும் பல்கலைக்கழகங்கள் இருக்கும்போது கலாச்சாரத்திற்காக, மொழிக்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்துக் கொண்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரால் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்" என்றார்.
சிந்தனைச்செல்வன் பேசுகையில், "கருணாநிதி பெயரால் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்" என்றார்.
ஜி.கே மணி பேசுகையில், "முதலமைச்சர் தயக்கமான செய்தியை சொன்னதாக அறிந்தோம். இவர்கள் கொடுத்திருக்கிறார்கள். நான் முதலமைச்சராக இருக்கக்கூடிய காலத்தில் கொண்டு வந்தால் இது ஏற்புடையதாக இருக்குமா என்று தயங்கியதாக கூறினார்கள். எந்த தயக்கமும் வேண்டாம், எல்லா தலைவர்களின் பெயர்களிலும் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கருணாநிதி பெயரிலும் பல்கலைக்கழகம் கொண்டு வர வேண்டும்" என்று கேட்டுக்கொள்கிறேன்.
அவை முனவர் துரைமுருகன் பேசுகையில், "மகிழ்ச்சியும் உணர்ச்சியும் பொங்க இந்த அவையில் அமர்ந்திருக்கிறேன். என்னைப் போலவே என் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு துள்ளலோடு இருக்கிறார்கள். எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கி அரசியலில் இன்றளவும் நிலைக்க வைத்தவர் கலைஞர். அவருடைய பெயரால் அரசியல் நடத்திய கும்பகோணத்தில் பல்கலைக்கழகத்திற்கு பெயர் சூட்டுகிறார்கள். எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. பிரதான எதிர்க்கட்சியை தவிர அத்தனை கட்சி சார்ந்த வரவேற்று பேசியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
சபாநாயகர் அப்பாவு பேசுகையில், "கல்வியின் மீது கருணாநிதி நாட்டமுள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும். முதன்முதலாக பட்டதாரிகள் கட்டணமில்லாமல் உயர் கல்வி படிக்கலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னால் கூட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்மணி கருணாநிதி கொண்டு வந்த முதல் பட்டதாரி என்ற திட்டம் வரவில்லை என்று சொன்னால் நான் இன்று இந்த உயர் பதவிக்கு வந்திருக்க முடியாது" என்றார்.
அதேபோல மாவட்ட வருவாய் அதிகாரி இருந்தவர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருக்கிறார் என்று சொன்னால் கருணாநிதி அன்று கொண்டு வந்த உயர்கல்விக்கு முதல் பட்டதாரிக்கு கட்டணம் இல்லாமல் படிப்பதே. கட்டணமில்லாமல் முதல் பட்டதாரிகள் படிக்கலாம் என்ற கருணாநிதி கொண்டு வந்த திட்டம் தான் பல்கலைக்கழகங்களுக்காக எல்லாம் பல்கலை கழகமான கருணாநிதி பெயரில் 55 விதியில் நானும் வரவேற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பேசுகையில், "கருணாநிதி பற்றி ஒருவர் ஒரு நாளில் நினைக்காமல் இருக்கிறார் என்றால் அவர் தமிழர் தானா என்ற சந்தேகம் எழும். கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.