கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடிய நிலையில் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க சட்டசபையில் சிறப்பு கவனம் ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவையில் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், பாமக, விசிக, தவக, மமக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரால், கும்பகோணத்தில் ககருணாநிதி பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இதை எவ்வித தயக்கமும் இன்றி அறிவிக்கிறேன். தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்ததற்கு கருணாநிதி தான் காரணம்.
அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்''. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.