Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒற்றுமை நடைப்பயணம் 2.0 | ராகுல் காந்தியுடன் இணையும் பிரியங்கா காந்தி?...

11:35 AM Dec 25, 2023 IST | Web Editor
Advertisement

ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 2.0-ல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

Advertisement

காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களுள் ஒருவர் ராகுல்காந்தி, இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ பாதயாத்திரையை தொடங்கினார். பின்னர் கேரளா, கர்நாடக, ஆந்திர உள்ளிட்ட 14 மாநிலங்கள் வழியாக பயணிக்க துவங்கிய இவர், அங்கு உள்ள தலைவர்களையும் பொதுமக்களையும் சந்தித்து தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்.

கிட்டத்தட்ட கன்னியாகுமரியில் இருந்து 150 நாட்கள் 4,080 கி.மீ தொலைவு நடந்தே காஷ்மீர் வரை சென்றடைந்த ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகரில் கடந்த ஜனவரி 30-ம் தேதி இந்த பாதயாத்திரையை நிறைவு செய்தார்.

அதனை தொடர்ந்து தற்போது ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 2.0-ல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.  ஜனவரியில் தொடங்க உள்ள இந்த நடைபயணமானது இந்தியாவின் கிழக்கு எல்லையில் தொடங்கி மேற்கு எல்லையில் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Next Article