அமைச்சர் பதவியில் இருந்து விலகி முழுநேர சினிமாவுக்கு திரும்ப விருப்பம் - மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சு..!
மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் பாஜக சார்பில் கேரளாவில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட முதல் மக்களவை உறுப்பினர் என்னும் பெயரை பெற்றார். தொடர்ந்து அவர் மத்திய இயற்கை எரிவாவு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் இன்று கேரள மாநிலம் கண்ணூரில் ஒரு கட்சி நிகழ்வில் சுரேஷ் கோபி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "நான் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன். நான் அதிகமாக சம்பாதிக்க வேண்டும்; எனது வருமானம் இப்போது முற்றிலுமாக நின்றுவிட்டது,
தேர்தல்களுக்கு முந்தைய நாள் வரை பத்திரிகையாளர்களுடன் பேசும்போது அமைச்சராக வேண்டாம் என்றே தெரிவித்திருந்தேன். கேரளத்திலிருந்து முதல்முறையாக மக்களால் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கட்சியைச் சேர்ந்த முதல் ஆள் நானாவேன். அதற்காக கட்சியிலிருந்து என்னை அமைச்சராக்கியுள்ளனர். என்னைவிட இந்த அமைச்சர் பதவிக்கு, கேரள பாஜகவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகியுள்ள சதானந்தன் மாஸ்டர் பொருத்தமானவர்” என்றார்.