Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஜூலை 22 முதல் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

04:29 PM Jul 06, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவையில் வரும் ஜூலை 23-ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நடப்பு நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தேர்தலுக்கு முன்பு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து, மக்களவை தேர்தல் முடிந்து தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என மத்திய விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் ​​மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “இந்திய அரசின் பரிந்துரையின் பேரில், 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். ஜூலை 22, 2024 முதல் ஆகஸ்ட் 12, 2024 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
BudgetBudget 2024_25Finance Ministerlok sabhaNDA GovtNews7Tamilnews7TamilUpdatesNirmala sitharamanRajya sabha
Advertisement
Next Article