For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2024-25-ம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியல்- செஞ்சிக் கோட்டை பரிந்துரை!

10:54 AM Jan 30, 2024 IST | Web Editor
2024 25 ம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியல்  செஞ்சிக் கோட்டை பரிந்துரை
Advertisement

2024 - 25 ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலுக்கு செஞ்சிக் கோட்டை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உலக பாரம்பரிய மையம் அறிவித்துள்ளது.

Advertisement

1510-ம் ஆண்டில் விஜயநகர மன்னர்களால் செஞ்சிக்கோட்டை கட்டப்பட்டது.  இதையடுத்து, ராஜகிரி,  கிருஷ்ணகிரி,  சதுரகிரி ஆகிய 3 கோட்டைகளுடன் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

இதையும் படியுங்கள் ; லாலு பிரசாத் யாதவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை – 9 மணி நேரத்திற்கு பின் நிறைவு.!

இந்நிலையில், 2024-25-ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அங்கீகாரம் பெறுவதற்கு தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தின் அருகே செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட மராத்தா ராணுவ நிலப்பரப்பு காட்சிகள் பரிந்துரைக்கப்படுவதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் நேற்று (ஜன.29) தெரிவித்துள்ளது.

மராட்டிய ஆட்சியில் ராணுவ சக்தியின் உத்தியாக பன்னிரண்டு பகுதிகள் இருந்தன. மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் சல்ஹேர் கோட்டை,  ஷிவ்னேரி கோட்டை,  லோகாட், கந்தேரி கோட்டை,  ராய்காட்,  ராஜ்காட்,  பிரதாப்காட்,  சுவர்ணதுர்க்,  பன்ஹாலா கோட்டை, விஜய் துர்க்,  சிந்துதுர்க் போன்றவற்றோடு தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி கோட்டையும் இடம் பெற்றுள்ளது.

இந்தக் கோட்டைகள் மராட்டிய ஆட்சியின் ராணுவ சக்தியாக இருந்து,  தற்போதும் 800 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்தை வெளிப்படுத்துகின்றன.  இந்த 12 புவியியல் மற்றும் நிலப் பகுதிகள் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அங்கீகாரம் பெற இந்திய அரசு சார்பில் யுனெஸ்கோவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement