“இந்தியாவின் தேர்தல் குறித்து ஐநா கவலை கொள்ளத் தேவையில்லை” - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!
தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள், அதைப்பற்றி ஐநா கவலைப்பட தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சமீபத்தில் ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே, இந்தியாவிலும் வாக்காளர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் என நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.