கேப்டன்களுடன் கலந்தாலோசித்த நடுவர்கள் - இம்பேக்ட் பிளேயர் ரூல்ஸில் மாற்றமா?
நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டி வருகிற மார்ச் 22ஆம் தேதி நடைபெற்றவுள்ளது. இதையொட்டி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று(மார்ச்.19) கேப்டன்கள் மற்றும் நடுவர்கள் இடையேயான ஒரு கூட்டத்தை நடத்தியது. அக்கூட்டத்தில் இம்பேக்ட் பிளேயர் உள்ளிட்ட சில விதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு சில முக்கிய முடிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி பந்து வீச்சின் போது பந்தில் உமிழ்நீர் தேய்ப்பதற்கு கொரோனா காலகட்டத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதை விடுவித்து இனி வீரர்கள் அவ்வாறு பந்தை வீசிக்கொள்ளலாம் என முடிவெடுக்கப்படுள்ளது.
அதே போல் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை நீடிக்கும் எனவும், 2027 வரை இந்த விதி இருக்கும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளில் பந்துவீச்சில் தாமதம் ஏற்பட்டால் அணியின் கேப்டன்களுக்கு விளையாட விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டு, அதற்கு பதிலாக புள்ளிகள் குறைக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது
முன்னதாக இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்ட்யா ஆகியோர் விமர்சனம் செய்திருந்தனர். இருப்பினும் இந்த விதி விளையாட வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.