For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Chennai-ல் இன்று தொடங்குகிறது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர்!

07:22 AM Aug 22, 2024 IST | Web Editor
 chennai ல் இன்று தொடங்குகிறது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர்
Advertisement

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் 6வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது.

Advertisement

நேரு உள்ளரங்கில் செப். 7 வரை நடைபெற உள்ள இந்த தொடரில் அகமதாபாத் எஸ்.ஜி.பைப்பர்ஸ், சென்னை லயன்ஸ், தபாங் டெல்லி, கோவா சேலஞ்சர்ஸ், ஜெய்பூர் பேட்ரியாட்ஸ், பெங்களூரு ஸ்மேஷர்ஸ், புனேரி பல்தான் டிடி, யு மும்பா டிடி என மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் களமிறங்குகின்றன. இந்த சீசனில் அகமதாபாத், ஜெய்பூர் அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு போட்டியிலும் 2 ஆண்கள் ஒற்றையர் ஆட்டங்கள், 2 மகளிர் ஒற்றையர் ஆட்டங்கள் மற்றும் 1 கலப்பு இரட்டையர் ஆட்டம் என மொத்தம் 5 ஆட்டங்கள் நடத்தப்படும். இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதி ஆட்டங்கள் செப். 5, 6 தேதிகளில் நடக்க உள்ளன. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி செப்.7ல் நடைபெற உள்ளது. இது வரை நடந்துள்ள தொடர்களில் எந்த அணியும் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றதில்லை. கடந்த சீசனில் நட்சத்திர வீரர் அசந்தா சரத் கமல் தலைமையிலான சென்னை லயன்ஸ் அந்த வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டது. பைனலில் கோவா சேலஞ்சர்சுடன் மோதிய லயன்ஸ் 7-8 என்ற கணக்கில் போராடி தோற்றது.

Tags :
Advertisement