Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரஷ்யாவின் மற்ற எண்ணெய் நிறுவனங்கள் மீதும் தடை விதிக்க வேண்டும்: அமெரிக்காவுக்கு உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்..!

ரஷ்யாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மீதும் தடை விதிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி  வலியுறுத்தியுள்ளார்.
04:46 PM Oct 25, 2025 IST | Web Editor
ரஷ்யாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மீதும் தடை விதிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி  வலியுறுத்தியுள்ளார்.
Advertisement

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினை முடிக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை.

Advertisement

அதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவின் ரோஸ் நெப்ட் மற்றும் அகோயில் ஆகிய இரு பெரும் எண்ணை நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ளார். உலக கச்சா எண்ணை விநியோகத்தில் 6 சதவீத பங்கை கொண்டுள்ள இந்த இரண்டு எண்ணை நிறுவனங்களும் ரஷ்யாவின் மிகப் பெரிய வருவாய் ஆதாரமாக உள்ளன.

இந்த தடை ரஷ்யாவின் பொருளாதாரத்தை பாதிக்காது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரஷ்யாவுடனான போர் குறித்து ஐரோப்பிய தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்ள அவர் லண்டன் சென்றுள்ள ஜெலன்ஸ்கி  அமெரிக்காவின்  இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த தடையை அனைத்து நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Tags :
#WayAmericalatestNewsOilsanctionsukrainrussiawar
Advertisement
Next Article