For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ #KurskNuclearPowerPlant -ஐ தாக்க முயன்ற உக்ரைன் படைகள் ” - ரஷ்ய அதிபர் புதின்!

08:54 AM Aug 24, 2024 IST | Web Editor
“  kursknuclearpowerplant  ஐ தாக்க முயன்ற  உக்ரைன் படைகள் ”   ரஷ்ய அதிபர் புதின்
Advertisement

உக்ரைன் படைகள் குர்ஸ்க் அணுமின் நிலையத்தைத் தாக்க முயன்றதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

Advertisement

ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் அதிரடியாக ஊடுருவலை முன்னெடுத்துள்ள உக்ரைன் படைகள் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலை நடத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்கா உட்பட நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வந்தாலும், தங்கள் ஆயுதங்களை ரஷ்யாவுக்குள் எவ்வாறு அல்லது எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.

இருப்பினும், உக்ரைன் படைகள் குர்ஸ்க் பிராந்தியத்தில் பல கிராமங்களை கைப்பற்றி முன்னேறி வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் Pokrovsk பகுதியில் ரஷ்யா கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருவதுடன், தங்களுக்கு சாதமாகவே நிலைமை இருப்பதாக அறிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, பல்வேறு கிராமங்களையும் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்திருந்தாலும், உக்ரைன் இதுவரை உறுதி செய்யவில்லை என்றே கூறப்படுகிறது. இதனிடையே, ரஷ்ய துறைமுகமான Kavkaz-ல் வியாழக்கிழமை உக்ரைன் தரப்பு முன்னெடுத்த தாக்குதலில், எரிபொருள் நிரப்பிய கப்பல் ஒன்று கடலில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்று கவ்காஸ் என குறிப்பிட்டுள்ளனர். இப்பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவதுடன், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பிரதேசமான கிரிமியாவிற்கும் எரிபொருள் அனுப்ப பயன்பட்டு வருகிறது.

எரிபொருள் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் ரஷ்யாவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஜோ பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு 125 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான நவீன ஏவுகணைகளை அனுப்ப முடிவு செய்துள்ளது.மிக விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் படைகள் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவும் போது, ​​குர்ஸ்க் அணுமின் நிலையத்தைத் தாக்க முயன்றதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறினார். அமைச்சரவைக் கூட்டத்தில், சர்வதேச அணுசக்தி முகமைக்கு (IAEA) தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்கள் தாங்களாகவே வந்து நிலைமையை மதிப்பிட நிபுணர்களை அனுப்புவதாக உறுதியளித்ததாகவும் புடின் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் ஆயிரக்கணக்கான உக்ரேனிய துருப்புக்கள் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஊடுருவலை பயங்கரவாத செயல் என அறிவித்துள்ள ரஷ்யா, படைகளை விரட்ட கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது.

Tags :
Advertisement