வாக்களிக்கும் வயதை 16-ஆக அறிவிக்க இங்கிலாந்து அரசு திட்டம்!
கடந்த ஆண்டு இங்கிலாந்து பொதுத் தேர்தலின்போது, தொழிலாளர் கட்சி வாக்களிக்கும் வயதினை 21லிருந்து 16 ஆக குறைப்பதாக வாக்களித்திருந்தது. அதன்படி, தற்போது இங்கிலாந்தில் வாக்களிக்கும் வயதை 16 ஆக குறைக்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் வாக்களிக்கும் வயதானது 21ஆக இருந்த நிலையில் கடந்த 1969 ஆம் ஆண்டு வாக்களிக்கும் வயது 18 ஆக குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் 56 ஆண்டுகளுக்கு பிறகு வாக்களிக்கும் வயது குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஐக்கிய ராச்சியத்தில் (UK) ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் 16 வயதினருக்கு வாக்குரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் வாக்காளார் அட்டைக்கு 14 வயது முதல் விண்ணப்பம் பெறப்படுகின்றது. ஆனால் தகுதியுடைய 70 முதல் 80 லட்சம் பேர் இதுவரை பதிவு செய்யாமல் உள்ளனர். இதன் விளைவாக கடந்த பொதுத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாததால் 4 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்ததுள்ளது.
இங்கிலாந்து அரசு தரப்பில் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு வியாழக்கிழமை கொள்கை ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இதன் மூலம், வங்கி அட்டை, ஓட்டுநர் அட்டை, முன்னாள் ராணுவ வீரர் அடையாள அட்டை உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள.
மேலும் இங்கிலாந்து தேர்தல்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் பணம் செல்வாக்கு செலுத்துவதைக் கடுமையாக கட்டுப்படுத்தும் விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ”16 வயதுடையவர்கள் வேலை செய்யவும் வரி செலுத்தவும் தகுதியுடையவர்களாக இருக்கும்போது, வாக்களிக்க உரிமை அளிப்பது மிகவும் அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.