Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இடஒதுக்கீடு தொடர்பான யுஜிசியின் புதிய வரைவு - மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு.!

08:48 PM Jan 28, 2024 IST | Web Editor
Advertisement

உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய  கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

Advertisement

இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பதவிகளில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பெறுவதற்கு போதிய இடங்கள் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களை நீக்குவதற்கான புதிய வரைவு வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது.

உயர் கல்வி நிறுவனங்களில் புதிய இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கடந்த டிச. 27ஆம் தேதி யுஜிசி வெளியிட்டது. யுஜிசி அறிவித்துள்ள இந்த அறிவிப்பின் மூலம் பொதுக் கருத்தை வழங்குவதற்கான கடைசி தேதி ஜனவரி 28 அன்று முடிடைவதாக அறிவித்திருந்தது.

இந்த புதிய கொள்கையின் படி  உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான உள்ள பதவிகளில் விண்ணப்பதாரர்களுக்கான இடஒதுக்கீடு  இடங்கள் நிரம்பாத பட்சத்தில் அந்த இடத்தை பொது பிரிவினருக்கு திறந்து விடுவதே இந்த புதிய வரைவின் திட்டம் ஆகும். இதற்கு அரசியல் கட்சியினர் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

தற்போது இருக்கும் விதிப்படி இடஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் நிரப்பப்படாத பட்சத்தில் அதில் பொது பிரிவினரை சேர்க்க முடியாது. ஆனால் புதிய விதிப்படி அரிதான மற்றும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் குரூப் A பிரிவு போன்ற பதவியில் இடஒதுக்கீடு செய்யப்பட்ட  இடங்கள் காலியாக இருந்தால் அதை பொதுபிரிவினரை வைத்து நிரப்பிக்கொள்ள முடியும்.

இந்த நிலையில் இட ஒதுக்கீட்டை பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கும் வரைவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.  உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய  கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags :
EducationobcOCReservationSCSTUGC
Advertisement
Next Article