For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

யுஜி-க்யூட் 2024 : தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!

10:45 AM Apr 01, 2024 IST | Web Editor
யுஜி க்யூட் 2024   தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு
Advertisement

இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு (UG - CUET) விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்.5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

மத்திய,  மாநில,  தனியார் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக ' CUET' தேர்வு கடந்த 2022 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.  இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு மே மாதம் 15 தேதி முதல் மே மாதம் 31  தேதி வரை நடைபெறுகிறது.  இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மார்ச் 26 ஆம் தேதி வரை இருந்தது.  இதையடுத்து, மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  இந்நிலையில்,  தற்போது காலஅவகாசம் மீண்டும் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா! - ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து சாமி தரிசனம்!

இது குறித்து  தேசிய தேர்வு முகமை மூத்த இயக்குநர் சாதனா பிரசார் கூறியதாவது :

"மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் அடிப்படையில்,  யுஜி-க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9.50 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  தேர்வு எழுதும் மாணவர்கள் அடையாளத்துக்காகத் தங்களது பள்ளி அடையாள அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அரசு அடையாள அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வில் கணினி வழியிலான தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு என இரு முறைகளில் பல பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.  அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் பெறப்பட்ட பாடங்களுக்கு ஓஎம்ஆர் தாளைப் பயன்படுத்தி தேர்வு நடைபெறும்.  பிற பாடங்களுக்கு கணினி வழியில் தேர்வு நடைபெறும்"

இவ்வாறு தேசிய தேர்வு முகமை மூத்த இயக்குநர் சாதனா பிரசார் தெரிவித்தனர்.

Tags :
Advertisement