யுஜி-க்யூட் தேர்வு 2024 | மே 15 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு!
இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மே 15 முதல் 18-ஆம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது.
மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக ‘ CUET’ தேர்வு கடந்த 2022 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு மே மாதம் 15 தேதி முதல் மே மாதம் 31 தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்ரல் 5 ஆம் தேதியோடு முடிவடைந்தது.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-40759000 என்ற தொலைபேசி எண்கள் அல்லது cuet-ug@nta.ac.in எனும் மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம்.
இந்த நுழைவுத் தோ்வானது, வெவ்வேறு பாடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, கணினி அடிப்படையில் மற்றும் நேரடி எழுத்துத் தோ்வு நடைமுறைகளிலும் நடத்தப்படுகிறது. நிகழாண்டுக்கான க்யூட்-யுஜி எழுத்துத் தோ்வு மே 15 முதல் 18-ஆம் தேதிவரை நடத்தப்பட இருக்கிறது.
நாடு முழுவதும் 380 நகரங்களிலும் வெளிநாடுகளில் 26 இடங்களிலும் தோ்வு நடைபெறுகிறது. தோ்வு மைய விவரங்கள் தேசிய தோ்வு முகமை வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கணினிவழித் தோ்வு வரும் 21, 22, 24-ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அதற்கான விவரங்கள் பின்னா் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.