Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அடுத்த 15 நாட்களில் உத்தவ் தாக்கரே மோடி அரசில் இணைவார்” - எம்எல்ஏ ரவி ராணா தகவல்!

04:29 PM Jun 03, 2024 IST | Web Editor
Advertisement

சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, தேர்தல் முடிவுகள் வெளியான 15 நாட்களில் மோடி அரசில் இணைவார் என அமராவதி எம்எல்ஏ ரவி ராணா கூறியுள்ளார்.

Advertisement

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி தொகுதி சுயேட்சை எம்எல்ஏயும், மக்களவை தேர்தல் பாஜக வேட்பாளர் நவ்நீத் ராணாவின் கணவருமான ரவி ராணா செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

“மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான 15 நாட்களில், சிவசேனா தலைவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே மோடி அரசில் இணைவார்.  அமராவதி மக்களவைத் தொகுதியில் நவ்நீத் ராணா 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அதிக அளவில் வாக்களித்துள்ளதால் நவநீத் ராணா மீண்டும் எம்பி-யாவார்.  ஜூன் 4 அன்று சிவசேனா காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான என்சிபி ஆகிய எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாதி (எம்விஏ) தலைவர்கள் ரத்த அழுத்த மாத்திரைகளையும்,  மருத்துவர்களையும் தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

அமராவதி மக்களவைத் தொகுதியில்,  காங்கிரஸ் எம்எல்ஏ பல்வந்த் வான்கடே, பிரஹர் ஜனசக்தி கட்சியின் தினேஷ் பப் ஆகியோரை எதிர்த்து எம்எல்ஏ ரவி ராணாவின் மனைவியும் நடிகையுமான நவ்நீத் ராணா,  பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார்.

அமராவதி தொகுதியின் தற்போதைய எம்பியாக உள்ள இவர்,  நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியில் உள்ளார்.  கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சுயேட்சை களமிறங்கி பாஜக ஆதரவுடன் அதே தொகுதியில் வெற்றி பெற்றார் நவ்நீத் ராணா.

Tags :
BJPElection2024Navneet Kaur RanaParlimentary ElectionRavi Ranashiv senaUddhav Thackeray
Advertisement
Next Article