For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விரைவில் பேருந்து சேவையைத் தொடங்கும் “ஊபர்” நிறுவனம்!

07:36 AM Nov 23, 2023 IST | Web Editor
விரைவில் பேருந்து சேவையைத் தொடங்கும் “ஊபர்” நிறுவனம்
Advertisement

கார் மற்றும் ஆட்டோ பயணங்களுக்கான சேவையில் ஈடுபட்டு வரும் ஊபர் நிறுவனம் விரைவில் பேருந்து சேவையைத் தொடங்க உள்ளது.

Advertisement

இந்தியாவில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், அலுவலகம் செல்பவர்களைக் கவரும் வகையில், வணிக மாவட்டங்களில் பேருந்து சேவையை ஊபர் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டது ஊபர் நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவிலும் வாடகை வாகன சேவையை வழங்கி வருகிறது. அதன்படி ஆட்டோ மற்றும் கார்கள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வந்த ஊபர், தற்போது பேருந்து சேவையிலும் இறங்குகிறது.

இதையும் படியுங்கள்:மக்களே அலர்ட்!! -தமிழகம் முழுவதும் அடுத்த 3 மணி நேரத்திற்கு பரவலாக மழை -வானிலை மையம் அப்டேட்!

மென்பொருள் நிறுவனம், தொழிற்சாலை மற்றும் அலுவலகம் செல்பவர்களைக் கவரும் வகையில், குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 60 குளிர்சாதன பேருந்துகள் மூலம் சோதனை முயற்சி செய்யவுள்ளது. வாடிக்கையாளர்களின் வீடு மற்றும் அவர்களில் அலுவலகம் இடையே பேருந்து சேவை அன்றாட சேவை வழங்கப்படவுள்ளது.

இதற்காக 2025ஆம் ஆண்டில் ஒரு கோடி டாலர்களை ஊபர் கொல்கத்தாவில் முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாகும் எனக் கூறப்படுகிறது. பேருந்து சேவைகளுக்காக மாநில போக்குவரத்துத் துறையுடன் ஊபர் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Tags :
Advertisement