யு19 உலகக்கோப்பை | பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா... இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதல்!
தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வரும் யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 16 அணிகள் பங்கேற்று விளையாடின. மொத்தம் 41 போட்டிகள். இந்திய அணி நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களம் கண்டுள்ளது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இந்தியா இறுதிக்கு முன்னேறியது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2 ஆவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அந்த அணியின் அசான் அவைஸ் மற்றும் அரபாத் மின்ஹாஸ் ஆகியோர் மட்டும் தலா 52 ரன்கள் சேர்த்தனர். 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்ட்ராக்கர் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர்.
தொடக்க வீரர் ஹேரி டிக்சன் 50 ரன்களும், ஆலிவர் பீக் 49 ரன்களும் சேர்க்க 49.1 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா