”இட்லி கடை” படத்திற்கு "யு" சான்றிதழ்.!
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.
03:08 PM Sep 22, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ் சினமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், பாடகர், தயாரிப்பளர் என பன்முக கலைஞராக விளங்கிறார்.
Advertisement
தனுஷ் இயக்கிய ப.பாண்டி மற்றும் ராயன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நான்காவதாக இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இப்படத்தில் நடிகர் அருண் விஜய், நடிகை நித்யா மெனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அக்டோபர் 1ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தணிக்கை வாரியம் இட்லி கடை படத்திற்கு "யு" சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த தகவலை நடிகர் தனுஷ் புதிய போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளார்.