For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

U/A சான்றிதழ் பெற்ற ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் | லேட்டஸ்ட் அப்டேட்!

03:18 PM Apr 03, 2024 IST | Web Editor
u a சான்றிதழ் பெற்ற ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம்   லேட்டஸ்ட் அப்டேட்
Advertisement

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  

Advertisement

தெலுங்கிலும்,  தமிழ் திரையுலகிலும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் ' பேமிலி ஸ்டார்'.  இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாக்கு ஜோடியாக நடிகை மிருனாள் தாக்கூர் நடிக்கிறார்.

பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு கே. யூ. மோகனன் ஒளிப்பதிவு செய்ய,  கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.  இந்த திரைப்படம் வரும் 5-ம் தேதி அன்று உலகம் முழுவதும்  வெளியாகிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வெளியாகியுள்ளது.  ஓரளவு நம்பிக்கை அளிக்கும் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு கூடுதல் வலுசேர்த்துள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தலைப்பிலேயே குடும்பம் பார்க்கும் காதல் கதையாக இப்படம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.  இருப்பினும், அதன் வெளியீட்டிற்கு முன்பு CBFC (மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம்) படத்தில் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைக் கண்டித்து,  சில வார்த்தைகளை சென்சார் போர்டு முடக்கியது.  இருப்பினும் சில ஆபாச வார்த்தைகள் காரணமாக இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ட்ரெய்லர் வீடியோ:

Tags :
Advertisement