For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மார். 24-ல் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இருசக்கர வாகன ஏலம்!

பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 146 இருசக்கர வாகனங்களை வரும் 24ம் தேதி ஏலத்தில் விடப்போவதாக போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
12:40 PM Mar 18, 2025 IST | Web Editor
பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 146 இருசக்கர வாகனங்களை வரும் 24ம் தேதி ஏலத்தில் விடப்போவதாக போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மார்  24 ல் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இருசக்கர வாகன ஏலம்
கோப்புப் படம்
Advertisement

சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம், ஜல்லடியன்பேட்டை உள்ளிட்ட பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெகுநாட்களாக ஒரே இடத்தில் கேட்பாரற்று இருந்த இருசக்கர வாகனங்களை மீட்டு போலீசார் காவல் நிலையத்தில் வைத்து வந்தனர்.

Advertisement

இந்நிலையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வரும் 24ம் தேதி கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனங்களை போலீசார் ஏலம் விடப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். கடந்த 3 வருடங்களாக கேட்பாரற்று கிடந்த 146 இருசக்கர வாகனங்களை வரும் 24ம் தேதி காலை 10 மணியளவில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் விட
போவதாக தெரிவித்தனர்.

ஏலம் எடுக்க நினைப்பவர்கள் வரும் 20ம் தேதி ரூபாய் 500 செலுத்தி பதிவு
செய்துக் கொள்ள வேண்டும் என்ற தகவலையும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement