ஜம்மு - காஷ்மீரில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பந்தீப்பூர் மாவட்டம் குரேஸ் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக ஜம்மு - காஷ்மீர் காவல்துறை உளவுத் தகவல் அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறைனர் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த மோதலைத் தொடர்ந்து, சுற்றியுள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் உள்ளதா என்பதை கண்கானிக்கும் நடவடிக்கை தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி காஷ்மீர் உரி செக்டார் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளில் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. அம்மோதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.