கிருஷ்ணகிரி அருகே மர்ம பொருள் வெடித்ததில், இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
Advertisement
கிருஷ்ணகிரி அடுத்த செல்லாண்டி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் 50 வயதான முருகன். இவர் தீயணைப்புதுறையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டில் தீடிரென அதிபயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் முருகனும், அவரது தந்தை அருணாசலமும் படுகாயம் அடைந்தனர். வெடி சத்தம் கேட்டு அருகில் இருந்து வந்தவர்கள், முருகனையும் அவரது தந்தையையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்தில் வீட்டின் வாசற்படி உடைந்து சிதறியது . வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகின. தகவல் அறிந்து வந்த போலீசார், வீட்டில் வெடித்த மர்ம பொருள் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.