கோவை வெள்ளிங்கிரி மலையேறிய பெண் உட்பட இருவர் பலி!
நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும்(மே.25) நாளையும் அதிதீவிர தொடர் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்திருந்தது. மேலும் வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. மேலும் மலை ஏறியவர்கள் திரும்பி வருமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த சூழலில் அங்கு தொடர் கனமழை பெய்ந்து வருவதால் வெள்ளியங்கிரி மலையேறும் பல பக்தர்கள் மலையேற்றத்தை தவிர்த்து வந்தனர்.
இதனிடையே கோவை வனக்கோட்டம் காரமடை வனச்சரகம் பரளிக்காடு மற்றும் பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தளங்களில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மலையேறிய இருவர் உயிரிழந்துள்ளனர். காரைக்காலை சேர்ந்த கவுசல்யா (45), என்ற பெண் 7 ஆவது மலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதே போல் 5 ஆவது மலையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் (32) என்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மலையேறிய பக்தர்களை பத்திரமாக அழைத்து வரும் பணியினை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர்.