Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காசிமேட்டில் ஒரே நாளில் இரண்டு கொலை - மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!

சென்னை காசிமேடு பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
07:16 AM Jul 30, 2025 IST | Web Editor
சென்னை காசிமேடு பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஸ்ரீதர் வயது 35. இவர் தற்பொழுது மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதர் தனது பழைய நண்பர்களை பார்ப்பதற்காக காசிமேடு படகு கட்டும் இடத்திற்கு மது பாட்டில்களுடன் சென்றுள்ளார்.

Advertisement

அப்போது மது அருந்தி கொண்டிருந்த ஸ்ரீதரை ஆட்டோவில் பின் தொடர்ந்து வந்த கும்பல் முன் பகையின் காரணமாக அவரது கை, கால், முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு 6 பேரும் ஆட்டோவில் தப்பி சென்றுள்ளனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவ செய்த போலீசார் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை தனிப்படையை அமைத்து தேடி வருகின்றனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று மதியம் ஒரு கொலை சம்பவம் அரங்கேரிய நிலையில் மீண்டும் இரவு ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
ChennaiinvestigationKasimeduMysterious gangPolicepolicecase
Advertisement
Next Article