For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற இரு இந்தியர்கள்" - பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா!

03:06 PM May 27, 2024 IST | Web Editor
 கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற இரு இந்தியர்கள்    பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா
Advertisement

கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற இரு இந்தியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார் மஹிந்திரா மற்றும் மஹிந்திராவின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.

Advertisement

பிரான்ஸ் நாட்டில் 1946ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ‘கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா’ நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டு இந்த திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் 7 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.  அந்த வகையில் மலையாளத்தில் இருந்து தேர்வான “All We Imagine As Light ” என்ற திரைப்படம் நேற்று முன் தினம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில்  திரையிடபட்டது.

இந்த ஆண்டு ‘கேன்ஸ்சர்வதேச திரைப்பட விழா’ மே 14ம் தேதி தொடங்கி மே 25ம் தேதி வரை நடைபெற்றது.  பல்வேறு திரைப்படங்கள் இந்த விழாவில் பல கெளரவ விருதுகளுக்கு போட்டியிட்டன.  இந்திய திரைத்துறை சார்பாக முன்னணி பாலிவுட் நடிகர் நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில்,  இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவைப் பொறுத்தவரை பல்வேறு இந்தியக் கலைஞர்கள் பெருமைமிக்க விருதுகளை வென்றுள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு பியர் அசிங்யு விருதை கேன்ஸ் திரைப்பட விழாவில் வழங்கி கெளரவித்தனர்.  மேலும்,  பாயல் கபாடியா இயக்கிய 'All We Imagine As Light' படம் இத்திரைப்பட விழாவின் இரண்டாம் உயரிய விருதான கிராண்ட் ப்ரிக்ஸ் விருதினை வென்றது.  மேலும் சிந்தாந்த் எஸ் நாயக்  இயக்கிய ‘சன்ஃபிளவர்ஸ்’ என்கிற குறும்படம் சிறந்த குறும்படத்திற்கான விருதினை வென்றுள்ளது.  இதையடுத்து, சிறந்த நடிகைக்கான விருதை இந்தியாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா வென்றுள்ளார்.

இதையும் படியுங்கள் : அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஜூன் 7ல் விசாரணை!

'தி ஷேம்லெஸ்' திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது அனசுயா சென்குப்தாவுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது.  சிறந்த நடிகைக்கான கேன்ஸ் விருதினைப் பெற்ற முதல் இந்தியப் பெண் அனசுயா செங்குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.  அனசுயா செங்குப்தாவுக்கு இந்தியத் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில்,  இந்தியா சார்பில் கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற அனசுயா சென்குப்தா மற்றும் பாயல் கபாடியா ஆகியோரின் இந்த வெற்றியைக் குறிக்கும் வகையில்,  மஹிந்திரா மற்றும் மஹிந்திராவின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, வாழ்த்துகளை தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது :

"கேன்ஸ் திரைப்பட விழா 2024ம் ஆண்டில் இரண்டு பெண்கள்  மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளனர். அனசுயா சென்குப்தா மற்றும் பாயல் கபாடியா ஆகிய இருவரின் பெயர்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. கேன்ஸ் திரைப்பட விழாவில் 'சிறந்த நடிகை' விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை அனசுயா சென்குப்தா பெற்றார். பாயல் கபாடியா தனது 'All We Imagine As Light'  திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது"

இவ்வாறு அனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement