Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Florida கேசினோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 'வெடிபொருட்கள்' பறிமுதல் - போலீஸார் தீவிர விசாரணை!

10:02 AM Oct 01, 2024 IST | Web Editor
Advertisement

புளோரிடாவின் தம்பாவில் உள்ள ard Rock Casino வளாகத்தில், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இரண்டு " வெடிபொருட்கள் " மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அடுத்து அங்கு பதற்றம் நிலவியது.

Advertisement

செமினோல் காவல் துறையின் அறிக்கையின்படி, வெடிபொருட்கள்  வளாகத்திலிருந்து அகற்றப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை இரவு நள்ளிரவுக்கு முன், கேசினோவிற்கு அருகில் உள்ள ஆண்கள் அறையில் முதல் "வெடிபொருட்கள்" கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வெடிபொருட்கள்"ஹில்ஸ்பரோ கவுண்டி ஷெரிப் அலுவலக வெடிகுண்டு அகற்றும் குழுவின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன் விரைவாக செயலிழக்கப்பட்டது " என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் அதிகாலை 3 மணியளவில் கேசினோ திறக்கப்பட்டது. மீண்டும் சூதாட்ட விடுதியின் மெஸ்ஸானைன் பகுதியில் உள்ள ஆண்கள் அறையில் இரண்டாவது மறைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட வெடிபொருட்களால் செமினோல் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
ExplosivesHard Rock
Advertisement
Next Article