For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை புளியந்தோப்பில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது!

சென்னை புளியந்தோப்பில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
08:58 PM Sep 10, 2025 IST | Web Editor
சென்னை புளியந்தோப்பில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை புளியந்தோப்பில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது
Advertisement

சென்னை அண்ணாநகரில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் மென் பொருள் துறை சார்ந்த படிப்பினை படித்து வரும் நபர்கள் லட்சுமி நாராய ணன் (21) கபிலன் (24) தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோர் பாளியந்தோப்பில் இரவு நேரத்தில் கிடைக்கும் பிரியாணி சாப்பிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்

Advertisement

பெரம்பூர் செங்கை சிவம் பாலம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள்  இவர்களின் வாகனத்தை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளனர்

இதனை சம்பவ இடத்திற் கு வந்த புளியந்தோப்பு காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் அவரது நண்பர்களிடம் கேட்டறிந்தனர். பின்பு சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள  பிரியாணி கடை அருகே சென்ற பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமான நிலையில் நின்று கொண் டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அந்த இரண்டு நபர்கள் தான் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் அவர்களது நண்பர்களிடம்செல்போ னை பறித்துக் கொண்டு சென்றது உறுதியான நிலையில் அவர்களை காவல் நிலையம் விசாரணைக்காக போலீசார் அழைத்தபோது பொழுது போலீஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் காவல் துறையினரை ஆபாசமாக பேசி கையில் மறைத்து வைத் திருந்த கத்தியால் அங்கிருந்த ஐயப்பன் என்கிற காவலரை தாக் கியதில் அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு வழியாக போலீசார் ரகலையில் ஈடுபட்ட இரண் டு நபர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர்கள் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஹர்ஷத் (21) சல் மான் பாஷா (23) என்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் அவரது நண்பர்களிடம் வழிப்பறி மூலம் பறித்த மூன்று செல்போன் களை போலீசார் பறிமுதல் செய்தனர் வழிப்பறி செய்வதற்கு பயன்படுத்திய பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் புளியந்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
Advertisement